2016ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட குழுக்கள்

குழுக்கள்‬  2016
நாராயணமூர்த்தி குழு
மாற்று முதலீட்டுக்கான கொள்கை என்ற தலைப்பில் தனது அறிக்கையை செபி (SEBI) அமைப்பிடம் சமர்பித்தது.
ஆர்.வி ஈஸ்வர் குழு
வருமான வரிச் சட்டம் 1961ன் செயல் திட்டங்களை எளிமையாக்க அமைக்கப்பட்ட ஈஸ்வர் குழுவின் அறிக்கை வெளியிடப்பட்டது


அரவிந்த் பனகாரிய குழு

மும்பை – அகமதாபாத் இடையிலான புல்லட் ரயில் சேவைக்கான ஆய்வை அரவிந்த் பனகாரிய தலைமையிலான குழு மேற்கொண்டுள்ளது
சியாம் பெனகல் குழு
மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்தை மாற்றி அமைப்பதற்காக சியாம் பெனகல் தலைமையிலான குழு அமைக்கப்பட்டுள்ளது
வேங்கையா நாயுடு குழு
ஜாட் இனத்தவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்பதனை ஆராய மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது
தீபக் நாயக் குழு
கோதாவரி ஆற்றை தூய்மைபடுத்தி புதுப்பொலிவு பெற செய்ய வேண்டிய வழிமுறைகளை ஆராய தீபக் நாயக் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது
மகேஷ் குமார் சிங்லா குழு
மத்திய அரசு அசாம் மாநிலத்தில் உள்ள குறிப்பிட்ட 6 மலைவாழ் மக்களின் இட ஒதுக்கீடு நிலையை ஆராய மகேஷ் குமார் சிங்லா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது
திவாகர் ரெட்டி குழு
திவாகர் ரெட்டி தலைமையிலான குழு ‘நுகர்வோர் பாதுகாப்பு மசோதா தொடர்பான தனது அறிக்கையை பாராளுமன்ற நிலைக்குழு முன் சமர்பித்தது. இக்குழு தனது அறிக்கையில் சமூகத்தில் மிக பிரபலமானவர்கள் விளம்பரத்தில் நடிக்கும்பொழுது அப்பொருட்களின் தரத்தினை அறியாமல் தகவல்களை பரப்பினால் அவர்களுக்கு 5 ஆண்டு வரை சிறை தண்டனையுடன் 50 இலட்சம் அபராதம் விதிக்கவும் பரிந்துரைத்துள்ளது
அசோக் தல்வாய் குழு
மத்திய அரசு 2022 ஆம் ஆண்டிற்குள் விவாசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளது .இதற்கான திட்ட வரவை அசோக் தல்வாய் தலைமையில் குழு அமைக்கப் பட்டுள்ளது
பி.பி தாண்டன் குழு
அரசு விளம்பரங்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை சரியாக பின்பற்றப்படுகிறதா என ஆராய பி.பி தாண்டன் தலைமையில் குழு அமைக்கப் பட்டுள்ளது
மதுக்கர் குப்தா குழு
இந்தியா -பாகிஸ்தான் எல்லை பகுதியில் உள்ள எல்லைகளை பாதுக்காப்பு மிக்கதாக மாற்ற வழிமுறைகளை வழங்க மதுக்கர் குப்தா தலைமையில் குழு அமைக்கப் பட்டுள்ளது
அசோக் லகாரி குழு
மத்திய அரசு ஆபரண நகைகள் மீதான கலால் வரி விதிப்பை செயல்படுத்துதல் தொடர்பாக அசோக் லகாரி தலைமையில் குழு அமைக்கப் பட்டுள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*