திருவண்ணாமலை மாவட்ட நீதித்துறையில் பணி

திருவண்ணாமலை மாவட்ட நீதித்துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம்ருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பதவி: Steno-Typist Grade-III – 05
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் சுருக்கெழுத்தில், தட்டச்சிலும் முதுகலை முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: தமிழ்நாடு திருத்திய ஊதிய விதிகளின் 2017ன் படி வரிசை எண் 1. மாதம் ரூ.20,600 – 65,500

பதவி: முதநிலை கட்டளை நிறவேற்றுநர் (Senior Bailiff) – 05
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: தமிழ்நாடு திருத்திய ஊதிய விதிகளின் 2017ன் படி வரிசை எண் 1. மாதம் ரூ.19,500 – 62,000

பதவி: இளநிலை உதவியாளர் (Junior Assistant) – 05
சம்பளம்: தமிழ்நாடு திருத்திய ஊதிய விதிகளின் 2017ன் படி வரிசை எண் 1. ரூ.15,700 – 50,000
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பதவி: நகல் எடுப்பவர் (Xerox Operator) – 09
சம்பளம்: தமிழ்நாடு திருத்திய ஊதிய விதிகளின் 2017ன் படி வரிசை எண் 1. மாதம் ரூ.16,600 – 52,400
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

பதவி: காவலர் (watchman) – 06
சம்பளம்: தமிழ்நாடு திருத்திய ஊதிய விதிகளின் 2017ன் படி வரிசை எண் 1.மாதம் ரூ.15,700 – 50000
தகுதி: தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: அனைத்து பதவிகளுக்கும் 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும்.
வயதுவரம்பு சலுகைகள் நடைமுறையில் உள்ள அரசு ஆணைகள் அரசு விதிமுறையின் படி செயல்படுத்தப்படும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களில் சுய சான்றொப்பத்துடன் “THE DISTRICT JUDGE, TIRUVANNAMALAI DISTRICT, TIRUVANNAMALAI. PINCODE – 606 604.” என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 02.03.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.ecourts.gov.in/tn/tiruvannamalai என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
நன்றி : சேகர் சுபா டி

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*