பத்தாம் வகுப்பு – சமச்சீர் தமிழ்

பெரியாரின் பெண்விடுதலைச் சிந்தனைகள்

2) பழந்தமிழ்ச் சமுதாயத்தில் பெண்களை மான்புடை மன்னர்கள் எவ்வாறு மதிக்கப் பெற்றார்கள்?
புலவர்களாகவும், பாடினியாகவும், விறலியாகவும் மதிக்கப்பெற்றனர்
=================================
3) நாட்டு விடுதலைக்கு போராடிய பெரியார், வேறு எதற்கு போராடினார்?
பெண்களின் சமூக விடுதலைக்கு
=================================
4) பெரியாரைப் பற்றிய பாவேந்தரின் படப்பிடிப்பு எவ்வாறு அமைந்துள்ளது?
தொண்டு செய்து பழுத்த பழம்
தூயதாடி மார்பில் விழும்
மண்டைச் சுரப்பை உலகு தொழும்
மணக்குகையில் சிறுத்தை எழும்
=================================
5) பெரியாரின் பெண் விடுதலைச் சிந்தனைகள் எத்தனை வகை? அவை யாவை?
இரண்டு, அவை:-
1) அடிப்படைத் தேவைகள்,
2) அகற்றாப்படவேண்டியவை
=================================
6) பெரியாரின் பெண் விடுதலைச் சிந்தனைகளில் “அடிப்படை தேவைகள்” எவை?
1) பெண்கல்வி
2) பெண்ணுரிமை
3) சொத்துரிமை
4) அரசுப்பணி
=================================
7) பெரியாரின் பெண் விடுதலைச் சிந்தனைகளில் “அகற்றப்பட வேண்டியவை” எவை?
1) குழந்தைத் திருமணம்
2) மணக்கொடை
3) கைம்மை வாழ்வு
=================================
8) நமது சமுதாயத்தில் பெண்கள் சார்ந்த தலைகீழான ஒரு புரட்சி ஏற்பட்டாலொழிய, பெரிய மாறுதல்கள் கொண்டு வர இயலாது – என்று கூறியவர்?
தந்தை பெரியார்
=================================
9) பெண்கள் மனிதப் பிறவிகளாக நடமாட வேண்டுமானால், முதலில் அடுப்பங்கரையை விட்டு அவர்கள் வெளியேறவேண்டும் – என்று கூறியவர்?
தந்தை பெரியார்
=================================
10) பெண்கள் கல்வி பெறுவது சமூக மாற்றத்திற்கு மிக இன்றியமையாதது – என்று கூறியவர்?
தந்தை பெரியார்
=================================
11) பெண்கள் கல்வி கற்றாலொழிய சமூக மாற்றங்கள் ஏற்படாது – என்று உறுதியாக எடுத்துரைத்தவர்?
தந்தை பெரியார்
=================================
12) பெண்களுக்கு எந்தெந்த படிப்புகளை தாராளமாக கொடுக்கவேண்டும் என்று பெரியார் கூறுகிறார்?
உலகப் படிப்பும் ஆராய்ச்சி படிப்பும்
=================================
13) “நாட்டிலுள்ள கேடுகளில் எல்லாம் பெருங்கேடு” – எது என்று பெரியார் கூறுகிறார்?
பெண்களைப் பகுத்தறிவற்ற சீவன்களாய் வைத்திருக்கும் கொடுமை
=================================
14) எந்த இழிநிலை ஒழிக்கப்படவேண்டும் என பெரியார் குறிப்பிடுகிறார்?
பெண்களைப் பகுத்தறிவற்ற சீவன்களாய் வைத்திருக்கும் கொடுமை
=================================
15) பெண்கள் உரிமை பெற்றுப் புது உலகைப் படைக்கவேண்டும் என்று விரும்பியவர்?
தந்தை பெரியார்
=================================
16) ஆணுக்குப் பெண் இளைப்பில்லை – என்று சிந்தித்தவர்?
தந்தை பெரியார்
=================================
17) பெண்கள் தத்தம் கணவனுக்கு மட்டுமே உழைக்கும் அடிமையாக இராமல், மனிதச் சமுதாயத்திற்கு தொண்டாற்றும் புகழ்பெற்ற பெண்மணிகளாக விளங்கவேண்டும் என்று வலியுரித்தியவர்?
தந்தை பெரியார்
=================================
18) பெண்ணுரிமை மறுப்புக்கான காரணங்களை நன்கு ஆராய்ந்தவர்?
தந்தை பெரியார்
=================================
19) பெண்களின் அடிமை வாழ்வுக்கு அடிகோலியது எதுவென்று பெரியார் கூறுகிறர்?
சொத்துரிமை மறுக்கப்பட்டமையே
=================================
20) பெண்கள் எதற்காக போராடவும் கிளர்ச்சி செய்யவும் வேண்டும் என பெரியார் கூறுகிறார்?
சொத்துரிமை மறுக்கப்பட்டதற்கு
=================================
21) பெரியாரின் சிந்தனைகளில் இன்று நடைமுறைக்கு வந்துள்ளது எது?
பெண்களுக்கான சொத்துரிமை
=================================
22) பெண்ணுரிமைக்கு ஊறுவிளைவிக்கும் பழைய நம்பிக்கைகளை ஏற்க மறுத்தவர்?
தந்தை பெரியார்
=================================
23) விடுதலைக்கு முன்னிருந்த பெருங்கொடுமைகளுள் ஒன்று?
குழந்தை மணம்
=================================
24) சிற்றில் சிதைத்து விளையாடும் பருவத்தில் பெற்றோர் செய்த வேதனை விளையாட்டு என பெரியார் குறிப்பிடுவது எதனை?
குழந்தைத் திருமணம்
=================================
25) குழந்தைத் திருமணத்தை நீக்கப் பாடுபட்டவர்?
தந்தை பெரியார்
=================================
26) தமிழர்களிடையே இன்று பரவியுள்ள பெருநோய்?
மணக்கொடை (வரதட்சனை)
=================================
27) தமிழ்நாட்டு இளைஞர்கள், மாணவர்கள், பட்டதாரிகள் ஆகியோர் செக்கு மாடுகளாய் இல்லாமல், பந்தயக்குதிரைகளாக மாறவேண்டும் – என்று கூறியவர்?
தந்தை பெரியார்
=================================
28) தாமே பாடுபட்டு உழைத்து முன்னேற வேண்டும் என்ற உயர்ந்த எண்ணம், நம் இளைஞர்களிடையே வளரவேண்டும் – என்று நாப்பறை ஆர்த்தவர்?
தந்தை பெரியார்
=================================
29) கணவனை இழந்தோர் மறுமணம் செய்துகொள்வதில் தீங்கில்லை – என்று தெரிவித்தவர்?
தந்தை பெரியார்
=================================
30) ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் என்ற வள்ளுவர் வாய்மொழியை நன்குணர்ந்தவர்?
தந்தை பெரியார்
=================================
31) ஒழுக்கம் என்பதும் கற்பு என்பதும் பெண்களுக்கு மட்டும் என்றில்லாமல் ஆண், பெண் இருபாலருக்கும் பொதுவானது – என்பது யாருடைய கருத்து?
தந்தை பெரியார்
=================================
32) சமூக முரண்களை எதிர்த்தவர்?
தந்தை பெரியார்
=================================
33) பெண்களே சமுகத்தின் கண்கள் – என்று கருதியவர்?
தந்தை பெரியார்
=================================
34) பெண்களை அடிமைத்தளையிலிருந்து மீட்டவர்?
தந்தை பெரியார்
=================================
35) யாருடைய வழிகாட்டுதலால், தமிழகம் இன்று தலைநிமிர்ந்து நிற்கிறது?
தந்தை பெரியார்
=================================
TNPSC OCEAN NOTES
=================================
சேகர் சுபா டி
=================================

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*